Wednesday, May 4, 2016

இலங்கையில் மே தின நிழ்வு மேடைகள் வெறும் அரசியல் பலத்தை நிறூபிக்கின்ற பூச்சாண்டிமேடைகளா?

மே மாதம் என்றளே நினைவுக்கு வருவது தொழிளாலர் உரிமைக்கோசத்தின் வெளிப்பாடாக, அடையாளமாக, அத்தியாயமாக எண்ணிப்போற்றப்படுகின்ற மே தினம் அல்லது சர்வதேச தொழிளாலர் தினமாகும். இத்தினத்தினை கௌரவிக்கும் முகமாக உலகின் பல்வேறு நாடுகள் இந்நாளை விடுமுறை தினமாக பிரகடனம் செய்திருக்கின்றன.மேலும் அத்தினத்தினை முதன்மைப்படுத்தி மாநாடுகள், பேரணிகளை ஒழுங்கு செய்து ஆரம்ப காலத்தில் தொழிலாளர் வர்க்கம் அனுபவித்த துயர்கள் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நடாத்தப்பட்ட போராட்டங்கள், தொழிலாளர் நலானுக்காய் முன்னைய தலைவர்கள் செய்த தியாகங்கள் என்பவற்றை இக்கால சந்ததியினருக்கு எடுத்தியம்புகின்ற நடைமுறை பல சோஷலிச நாடுகளிலும் சில சிறப்பான அராசியல் கலாச்சாரத்தை கொண்ட நாடுகளிலும் இருக்கின்றமை அந்நாடுகள் தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவமாகும். 

துரதிஷ்டவசமாக எம் இலங்கை திருநாட்டில் அனுஷ்டிக்கப்படுகின்ற மே தின நிகழ்வுகள் யாவும் ஒவ்வோர் அரசியல் கட்சிகளுடைய அதாவது ஒரு பக்கம் ஐக்கிய தேசிய கட்சி நாங்கள் 75000 பேரை ஒன்றுதிரட்டிக்காட்டினோம் என்றும் சனாதிபதியின் சுதந்திர கட்சி கூட்டு எதிரணியினரைவிட அதிகமானோர் எம்பக்கமே என்றும் மறுபக்கம் கூட்டு எதிரணியினர் நீதிமன்ற தடை உத்தரவினையும் தாண்டி கூட்டம் நடாத்தி விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். 

மேலும் வடபுல மற்றும் மலையக தமிழ் கட்சிகள் ஏட்டிக்குப்போட்டியாக மக்களை அணிதிரட்டி அராசியல் இலாபம் தேடுகின்றனர். இவர்களிடத்தில் நாம் தொடுக்கின்ற கேள்வி என்னவெனில் வெயில், மழையென பாராது நாடுபூராகவுமிருந்து உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் நிமித்தம் ஒன்றுதிரண்ட தொழிலாளர்களுக்கு இத்தினத்தில் நீங்கள் சொன்ன செய்திதான் என்ன? யாழ்பாணத்தில் இருந்து காலிக்கு இத்தனை பேர் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு இத்தனை பேர் கொண்டு வந்தோம் என தம்பட்டம் அடிக்கும் அரசியல் வாதிகளே! உங்கள் மாவட்டங்களில் எத்தனை தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர் நலன் பேணுகிறீர்கள்? புதிதாக உருவாக இருக்கும் அரசியல் அமைப்பில் தொழிலாளர் நலன் பேணும் சட்டம் எவ்வாறானதாக அமைய வேண்டும் என்ற கருத்துக்கணிப்பையாவது செய்யமுடியாமல் போனதேன்? 

மழைக்கு நீங்கள் பச்சை தொப்பி கொடுத்தால் நாங்கள் நீள தொப்பி கொடுப்போம் தலையுடன் சேர்த்து மூளையையும் மூடிக்கொள்ளுங்கள் என ஏட்டிக்குப்போட்டியாக பலக்கோடிக்கணக்கான ரூபாய் வீண்விரயமாக்கப்பட்டதே இதுதானா மே தின பரிசு? நீங்கள் பதாகைகளுக்கும் போஸ்டர்களுக்கும் செலவு செய்த பணத்தால் எத்தனையோ ஏழைத்தொழிலாளர் கஷ்டம் தீர்த்திருக்கலாம் அல்லவா? சிறு கூட்டத்தை தானும் கூட்டி மே தின செய்தியை சொல்ல வக்கற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களை அழைத்து பச்சை மேடையிலும் நீள மேடையிலும் உட்கார வைத்து தொழிலாளர்க்கு சொன்ன செய்தி அவர் இன்னும் பச்சை இவர் இன்னும் நீளம் என்பதா? ஐக்கிய தேசிய கட்சியினரே! 

நல்லாட்சி என்ற கோஷத்தோடு ஆட்சிபீடம் வந்த நீங்களாவது அரசியல் மேடைகள் போல் அல்லாது மேற்கத்தைய சனநாயக மேடைகள் போல் அமைத்து புதியதோர் முன் மாதிரியை அறிமுகம் செய்திருக்க முடியும்! இவ்வாறாக எவ்வித தொழிலாளர் நலனுமின்றி தமது அரசியல் இலாபம் மட்டும் கருதிய நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளுக்கான முக்கிய காரணம் ஆட்சியாளர்களாகிய நீங்கள் அனைவரும் பணம் படைத்த முதலாளி வர்க்கத்தினர் என்பதனாளா? இறுதியாக தொழிலாளர் படை தொழிலாளர்களை ஆழும் காலம் வரவேண்டும் என்ற கார்ல் மாக்ஸினது கூற்றோடு மௌனிக்கிறது எனது பேனா.

-SIFAS NAZAR -(BA Reading  LLB OUSL)
Disqus Comments