வடமேல்
மாகாணத்தில் நிலவும் ஆசிரியா் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 பேருக்கு ஆசிரியா்
நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மத்திய
அரசின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என் வடமேல் மாகாண கல்வி அமைச்சர்
சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமேல்
மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 30 வீதமான வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, புத்தளம்
மாவட்டத்தில் பெருமளவு வெற்றிடங்கள் நிலவுகின்றன.
பின்தங்கிய
பிரதேச பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 500 ஆசிரியா்களுக்கு மாகாண
சபையினூடாக நியமனங்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
மத்திய அரசின் நிதியினூடாக 500 ஆசிரியா் நியமனங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாசிரியா்கள்
வடமேல் மாகாணத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கே நியமனம் பெறுவா் எனவும் மாகாண
கல்வி அமைச்சா் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைக்கூட்டத்தொடரின் போது
உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.