அக்கரைபத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (02) மாலை கடையாமோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதயாக கலந்துகொண்டபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
பிராந்திய இணைப்பாளர் பைசால், மற்றும் ஆப்தீன் சுமார் 50 பேருக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்து கட்சியின் தலைவருக்கு மாலை அணிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
பிரதியமைச்சர் பைசல் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், எச்.எம். றயிஸ், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பாறூக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பைறூஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்.

