Monday, June 13, 2016

அமெரிக்க இரவு கேளிக்கை விடுதியில் மா்ம நபா் துப்பாக்கிச் சூட்டால் 50 பேர் பலி பலா் காயம்.


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆர்லந்தோ நகரில் உள்ள பல்ஸ் என்ற இரவு கேளிக்கை விடுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

அதிகாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

உடனடியாக அங்கு வந்த பொலிசார், பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆர்லந்தோ நகர தலைமை பொலிஸ் அதிகாரி ஜான் மின்னா கூறினார். மேலும் காயமடைந்த 42 பேர் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று ஆர்லந்தோ பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினர்.
Disqus Comments