Monday, June 13, 2016

இது எமது இலங்கையில் தான். தும்புத்தடியால் குழந்தையை அடித்துக் கொன்ற பெண் கள்ளக் காதலனுடன் கைது -

தும்புத்தடியால் தாக்கி, தனது இரண்டு வயதான குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் தாய் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பெண் சில மாதங்களுக்கு முன்னர் அதுருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, தனது குழந்தையை தாக்கிக் கொன்றுள்ளார். 

பின் அவரது கள்ளக் காதலனுடன் இணைந்து, அப் பகுதியிலேயே குழந்தையின் சடலத்தையும் புதைத்துள்ளார். 

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த 26 வயதான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் கைதான அப் பெண்ணின் கள்ளக் காதலன் கொழும்பைச் சேர்ந்தவராவார். 

இது குறித்த மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Disqus Comments