நோன்பு காலம் வந்ததும் அறபு நாடுகளில் கூடாரம் அமைத்து நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது வழமை. அந்தத் தொடரில் துபாய் இளைஞா் விவகார அமைச்சா் Shamma Suhail Faris Al Mazroui, கடந்த திங்கட் கிழமை நோன்பு திறக்க வீடுகளை சென்றடைய முடியாத மோட்டார் வாகனங்களுக்கு பாதையில் வைத்து இப்தார் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேற்படி செய்தியை கல்ப்நியூஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது.