`முதல் முறையாக இணையத்தினூடாக நடாத்தப்படும் கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கற்கிழமை முதல் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாடியில் 15 நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த பரீட்சை எழுத்து மூலம் இடம்பெற்ற அதேவேளை இந்த ஆண்டு முதல் பரீட்சையை கணணி மூலம் இணையத்தினூடாக நடாத்த கொரிய மனிதவள முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.