Wednesday, June 15, 2016

புத்தளத்தில் குடிநீர் விநியோகத்திட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன - மாகாண சபை உறுப்பினா் நியாஸ்.

(TM - ரஸீன் ரஸ்மின்) ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் புத்தளத்தில் முன்னெடுக்கப்படுகின்ற குடிநீர் விநியோகத்திட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குறித்த குடிநீர்த் திட்டப் பணிகள் நீண்ட நாட்களாக மந்த கதியில்  முன்னெடுக்கப்பட்டன. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளத்துக்கு விஜயம் செய்த போது நகர அலங்காரம், நீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடலொன்று புத்தளம் கச்சேரியில் இடம்பெற்றது. 

இதன்போது, புத்தளம் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில்  முன்னெடுக்கப்படுகின்ற குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக மந்த கதியில்  முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். 

இது குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், குறித்த பணிகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டு, மிக விரைவாக அந்தப் பணிகளை நிறைவு செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார். அமைச்சரின் பணிப்புரையை அடுத்து மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட புத்தளம் மாவட்ட குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

Disqus Comments