Wednesday, June 15, 2016

முஸ்லிம் வரலாற்றில் கறை படிந்த நாள் அளுத்கமை சம்பவத்துக்கு 2 வருடம் பூா்த்தி. மன்னிப்போம், ஆனால் மறக்க மாட்டோம்.

(S.N.M. Suhail) இரண்டு வருடங்கள் நிறைவு : நஷ்டயீடுகள் கிடைக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்­பெற்ற தாக்­கு­தல்­களால் பெரும் அழி­வுகள் ஏற்­பட்டு இரண்டு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வி­த­மான நஷ்­டயீடும் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் இந்த தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து பக்­கச்­சார்­பாக நடந்­த­மையால் அவர்­களை தோற்­க­டிக்­கச்­செய்து புதிய அர­சாங்­க­மொன்றை அமைத்­த­போ­திலும் இந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் தம்மை ஏமாற்­றி­விட்­ட­தாக அவர்கள் குற்றம் சுமத்­தினர்.


அளுத்­கம நக­ரி­லுள்ள அழகுசாத­ன பொருட்கள் விற்­பனை நிலை­ய­மொன்றில் தொழில் செய்­பவர் சிறுவர் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை செய்­த­தாக குற்றம் சுமத்­திய கடும் போக்­கா­ளர்கள் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தினர். இந்­நி­லையில் குறித்த கடை 2014 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி எரி­யூட்­டப்­பட்டு நாச­மாக்­கப்­பட்­டது.

அத்­துடன் சில தினங்­க­ளுக்கு பின்னர் தர்கா நகரில் வா­க­ன­மொன்றை பின்­ந­கர்த்தும் போது ஏற்­பட்ட வாக்­கு­வாதம் கைக­லப்பில் நிறை­வ­டைந்­தது. இவ்­வாறு சில சம்­ப­வங்கள் ஏற்­பட்­டி­ருந்த நிலையில் பொது பல சேனா அமைப்­பினர் 2014 ஜூன் மாதம் 15 ஆம் திகதி பொசன் போயா தினத்­தன்று அளுத்­கம நகரில் கூட்­ட­மொன்றை நடத்தி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விஷமக் கருத்­துக்­களை பிரச்­சாரம் செய்­தனர்.


இக்­கூட்­டத்தில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கலா­கொட அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சாதா­ரண பௌத்த மக்­களை தூண்டும் விதத்­தி­லான உரை­யொன்றை நிகழ்த்­தினார்.

அன்­றைய தினம் பி.ப. 5 மணி­ய­ளவில் பொது­ப­ல­சேனா தலை­மை­யி­லானோர் ஊ­ர்வ­ல­மாக தர்கா நகரை நோக்கி சென்­ற­வேளை முஸ்லிம் தரப்­பி­ன­ருடன் முறுகல் நிலை ஏற்­பட்­டது.


இத­னை­ய­டுத்தே அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை பகு­தி­களில் பல கடைகள் எரி­யூட்­டப்­பட்­டன. அத்­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 500 க்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­மாக்­கப்­பட்­டன.

அத்­துடன் பல வீடு­களில் பணம், நகை, இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்கள் மற்றும் பெறு­ம­தி­மிக்­க பொருட்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன.


பல வீடுகள் முழு­மை­யாக எரி­யூட்­டப்­பட்­டன. பல­ரது வாக­ணங்­களும் எரி­யூட்டி நாசப்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் பண்­ணை­க­ளுக்கும் எரி­யூட்­டப்­பட்­டன. பிற்­பகல் 5 மணி தொடக்கம் மறுநாள் அதி­காலை வரை முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.


வாள், கத்தி, தடி, துப்­பாக்கி, பெற்றோல் வெடி குண்டு போன்­றன பயன்­ப­டுத்­தப்­பட்டே முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டனர். இச்சம்பவத்தால் வெலிப்பன்னை மற்றும் துந்துவ பகுதிகளிலும் அச்ச நிலை ஏற்பட்டது.


இச்­சம்­ப­வத்தில் சிக்­குண்டு முஹம்மட் சிராஸ் என்ற 2 பிள்­ளை­களின் தந்­தையும் மொஹமட் சஹ்ரான் எனும் 3 பெண் பிள்­ளை­களின் தந்­தையும் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன், 11 பேர் துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி காய­முற்­றனர்.

22 வயதுடைய அப்கர் மற்றும் 18 வயதுடைய அஸ்ஜத் ஆகிய இரு இளைஞர்கள் தனது காலை இழந்துள்ளனர். மேலும் 80 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.


சம்­ப­வத்­தின்­போது பிர­தே­சத்தில் தொலை­பேசி வலை­ய­மைப்­புகள் செய­லி­ழக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் மின்­சா­ரமும் துண்­டிக்­கப்­பட்­டது. அத்­துடன் ஒரு­வார காலம் அர­சாங்கம் ஊர­டங்கு சட்­டத்­தையும் பிறப்­பித்­தி­ருந்­தது. இதனால் முஸ்­லிம்கள் பல நாட்­க­ளாக வீட்­டுக்­குள்­ளேயே முடங்கிக் கிடந்­தனர். ஆனால், அங்­குள்ள பெரும்­பான்­மை­யினர் சுதந்­தி­ர­மாக வெளியில் நட­மா­டினர்.

இது இவ்­வா­றி­ருக்க, இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய 41 பேர் அளுத்­கம பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட போதிலும் அன்­றைய தினமே 16பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டது. ஏனையோர் குறு­கிய காலத்­திற்குள் விடு­விக்­கப்­பட்­டனர்.


இச் சம்­பவம் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் களுத்­துறை நீதிவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இச்­சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்னும் நீதி பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.


உயி­ரி­ழந்த இரு­வரின் குடும்­பங்­க­ளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதமே அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­ட­ன.

பாதிக்­கப்­பட்ட வீடுகள் மற்றும் கடைகள் என்­பன படை­யி­னரால் திருத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டுள்ள­ன.


எனினும் மக்­களின் இழப்­புக்­கேற்ற நஷ்டயீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை என பாதிக்­கப்­பட்ட மக்கள் அங்­க­லாய்­கின்­றனர்.

அத்­துடன், படை­யி­னரால் திருத்­தப்­பட்ட பாதிக்­கப்­பட்ட வீடுகள் தமக்கு திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.


இத­னி­டையே, அளுத்­கம நகரில் எரி­யூட்­டப்­பட்ட கடை­க­ளுக்கோ, காயமடைந்தோருக்கோ, கால்களை இழந்தோருக்கோ முன்­னைய அர­சாங்­கத்­தினால் எவ்­வி­த­மான நஷ்டயீடும் வழங்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்த மக்கள் எம்­மீது கடும்­போக்­கா­ளர்கள் தாக்­குதல் நடத்­தி­ய­போது வேடிக்கை பார்த்த அர­சாங்­கத்தை நாம் தோற்­க­டித்து புதிய நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆத­ரித்தோம்.

இந்த நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்தை கைப்­பற்றி ஒன்­றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எமக்கு எவ்விதமான நீதியும் கிடைக்கவில்லை. ஒரு சதமேனும் நஷ்டயீட்டுத் தொகையும் புதிய அரசாங்கத்தினால் தரப்படவில்லை என தெரிவித்தனர்.


அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீதான தாக்குதல்களை தமது சுயநல அரசியலுக்காக மாத்திரம் பயன்படுத்தினர் என குற்றம் சுமத்திய துடன், கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் பதவிகளை பெற்றுள்ளனரே தவிர எமக்கு எவ்விதமான நீதியையும் பெற்றுத்தர இதுவரைக்கும் முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்­பிட்­ட­னர்.
(நன்றி புத்தளம் ரூடே)
Disqus Comments