'கச்சத்தீவை மீட்பதுடன், அங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தை தமிழக மீனவர்கள் பங்களிப்புடன் கட்ட வேண்டும், தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்' என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகொளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஜெயாவின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க தமது அலுவலகத்திலேயே சிறப்புக் குழு அமைப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைபை ஏற்று, டெல்லிக்கு நேற்று விஜயம் செய்த ஜெயலலிதா 04.30 மணிக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்துக்குச் சென்றார். மாலை 4.45-க்கு இருவரும் சந்தித்தனர். இதன்போது, மிக முக்கியமான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் கையளித்திருந்தார்.
கடந்த மாதம் இடம் பெற்ற முதலமைச்சருக்கான தோ்தல் விஞ்ஞாபனத்தின் போது தான் வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.