புலத்கொஹுபிட்டிய, கலுபஹன தோட்டத்தில் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
கேகாலை – புலத்கொஹுபிட்டியவில் உள்ள கலுபஹன தோட்டத்தில் கடந்த மாதம் 17 ஆம் திகதி மண்சரிவு ஏற்பட்டது.
அனைத்தையும் இழந்த மக்கள் அன்றிலிருந்து கடந்த 23 நாட்களாக தற்காலிக நலன்புரி நிலையங்களில் பல்வேறு இடையூறுகள் மற்றும் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கலுபஹன தோட்டத்தில் பாதுகாப்பான இடங்களில் 100 வீடுகளை அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த வீடுகள் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.