(MN) மாத்தறை சென். தோமஸ் கல்லூரியில் 12 ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவன் மாத்தறை நூபே பிரதேசத்தில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளான்.
அம்மாணவன் தெளிஜ்ஜவில பகுதியை சேர்ந்த ஹரீன் சமல்க என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறி பாடசாலைக்கு செல்லாமல் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்து "அம்மா, நான் சாகிறேன்" என்று கூறி உள்ளார்.
இதனால் பதட்டமடைந்த தாய் நண்பர்களிடம் விசாரித்த பொது அம்மாணவன் தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.