ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் எண்ணம் கானல் நீர் போன்றது என பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது, நிதி அமைச்சருக்கு மட்டும் எதிரானதல்ல என்றும் அது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டதாகவே கருதப்படுகிறது என்றார்.
இந்த ஆட்சியை கவிழ்க்க பலர் முயற்சிப்பதாகவும், இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு 9 மாதங்களே கடந்துள்ளது என்றும், ஆகையால் இந்த அரசு குழுந்தை அரசு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த தேசிய அரசின் எண்ணங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் இரு கட்சிகளினதும் மத்திய செயற்குழு கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுதந்திரமாக பேசுவதற்கு, சேவையாற்றுவதற்கான சூழலையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.