Saturday, June 11, 2016

சீமெந்தை 930 ரூபாவுக்கு அதிகமாக விற்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித திலகரட்ன கூறினார். 

சீமேந்து தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றின் கோரிக்கை படி சீமேந்து விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. 

அந்தவகையில் கடந்த 01ம் திகதி முதல் 60 ரூபா விலை உயர்வுடன் 870 ரூபாவாக இருந்த சீமேந்து விலையை 930 ரூபாவாக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்பு கடந்த 01ம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சீமேந்துகளுக்கு செல்லுபடியாகாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறியுள்ளது. 
Disqus Comments