Saturday, June 11, 2016

அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தினார் பிரதமர்

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள வீடுகளுக்கான நட்டஈடு வழங்கும் வரையில், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில், திறைசேறியின் செயலாளருக்கு, பிரதமரால், நேற்று வியாழக்கிழமை அறிவிப்பொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக, நாடாளுமன்றத்தில் குறைநிறப்புப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரையில், அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடம்பெறாதென கூறப்படுகிறது. 
Disqus Comments