Sunday, July 31, 2016

இந்திய இராணுவத்திற்கு எதிராக மதுரங்குளியில் பாரிய ஆர்பாட்டம்

(Puttalam Online) காஷ்மீர் மக்கள் படும் அவலத்தை கண்டித்து இன்று (29-07-2016) ஜும்மாவின் பின்பு மதுரங்குளி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கெடுத்த  மக்களோடு முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் எஸ். ஆப்தீன் எஹியா, ஏ.எச்.எம். ரியாஸ், வடமேல் மாகாண சபை உருப்பினர் என்.டி.எம். தாகிர், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.  இல்யாஸ் , கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் முசம்மில், அன்சார், சஹீத் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பெருக்குவட்டான் அமைப்பாளர் எம். பைரூஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் , அண்மித்த கிராமங்கள் மற்றும் புத்தள பிரதேசத்தை சூழவுள்ள மக்களும் வருகை தந்து இருந்தனர்
திருப்திகராமாய் நிகழ்ந்த இந்நிகழ்விற்கு பங்காற்றிய அனைவருக்கும், விசேடமாக ஊடகத்துறையை சார்ந்த நண்பர்களுக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.






Disqus Comments