24ம் திகதி நடைபெற்ற இருந்த அரசகரும மொழித் தோ்ச்சி
எழுத்துப் பரீட்சை - 2016 காலவரையரையின்றி ஒத்திவைப்பு
இலங்கை பரீட்சைத் திணக்களம்
மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் எதிர்வரும் செப்டம்பா் மாதம் 24ம் திகதி
நடாத்தப்பட இருந்த அரசகரும மொழித் தோ்ச்சி எழுத்துப் பரீட்சை – 2016 காலவரையரையின்றி
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உதவிப் பரிட்சைகள் ஆணையாளா் S. பிரன்னவதாசன் தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் 130 மத்திய நிலையங்களில் 18000 பரீட்சாத்திகள் மேற்படி பரீட்சைக்குத்
தோற்ற இருந்தனா். பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு
இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான புதிய திகதி பின்னா் அறிவிக்கப்படும்.
(நன்றி – சக்தி T.V. செய்திகள். வீடியோவை முழுமையாக பார்க்கவும்)