Wednesday, September 21, 2016

காடையா்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட பாணந்துரை NOLIMIT கிளை மீள ஆரம்பிக்கப்பட்டது.

(முஜீப் இப்றாஹீம்) இனவாத தீயில் கருகிப்போன நோலிமிட் பாணந்துரை கிளை இன்று மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நோலிமிட் குழுமத்தின் மிகப்பெரிய காட்சியறை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அளுத்கம கலவரங்களை தொடர்ந்து திட்டமிட்டு எரிக்கப்பட்ட இந்த கிளையினை மீண்டும் ஒரு நாள் கட்டியெழுப்புவேன் என மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அதன் உரிமையாளர் முபாரக் ஹாஜியார் அப்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறைவனுடைய துணையோடு நல்லாட்சி அரசின் வருகையானது அதற்கு வழிசமைத்தது.
யாரோ ஒரு செல்வந்தரின் இன்னொரு கடை என்பதற்கு அப்பால் இனவாத கோர முகத்தில் நீதிக்காக போராடிய மக்கள் காறி உமிழ்ந்ததால் விளைந்த மற்றுமொரு வெற்றியாகவே இது நோக்கப்பட வேண்டும்.






Disqus Comments