Monday, September 26, 2016

கொழும்பில் சோ்ந்துள்ள 800டொண் புத்தளம் கொண்டு செல்ல அரசாங்கம் தயார்?


கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பை மேட்டை புத்தளம் - அருவக்காடு பகுதிக்கு எடுத்துச் செல்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

இவற்றை அருவக்காடு பகுதியிலுள்ள கற்குழிகளில் புதைக்கவே இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேல் மாகாண கழிவுப் பொருள் பிரச்சினை தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொள்ள அமைச்சரவையின் உப குழுவில் நியமிக்கப்பட்ட செயலாளர்கள் இது குறித்து தற்போது நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டு வருவதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் சேரும் கழிவுகளில் 800 டொன் வரை தற்போது கொலன்னாவ - மீதொட்டமுல்லை பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. 

இதனால் அப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. 

(அத தெரண தமிழ்)
Disqus Comments