(NF) புத்தள பிரதேச செயலக காரியாலயத்திற்கு அண்மையில் புகுல்கொட்டுவ சந்தியில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் தீ பரவியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீயினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 100 இலட்சத்திற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கில் ஏற்பட்ட கோளாரே இந்த தீ விபத்திற்கு காரணம் என புத்தள பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
