Saturday, September 17, 2016

கட்டார் வாழ் விருதோடையா்கள் சங்கத்தினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


கட்டார் வாழ் விருதோடையா்கள் சங்கத்தின் (நண்பா் குழுமம்) முதலாவது செயற்திட்டம் நேற்று (15-092016) அன்று விருதோடைப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில், விருதோடைப் பாடசாலையின் அதிபா் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில்  விருதோடை, ரெட்பானா பாடசாலைகளில் கல்வி பயிலும் திறமையான, வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

கட்டார் வாழ் விருதோடையா்கள் சங்கத்தின் (நண்பா் குழுமம்)  என்பது யார், அவா்கள் செய்யப்போகும் வேலைகள் என்ன?,  அவா்களது எதிா்கால இலக்குகள் யாவை? அவா்கள் எப்படி இயங்குகின்றார்கள்? அவா்களுக்கு நிதி எங்கிருந்து வருகின்றது? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை உள்ளடக்கிய சங்கம் தொடா்பான  அறிமுக விளக்கம் மேற்படி நிகழ்வில் முன்னால் ஆசிரியா் Mr. SM.சவாஹிா் மற்றும் Mr. AMM. அஷ்ரப்  ஆகியோரால் சபையினருக்கு வழங்கப்பட்டது. 













Disqus Comments