(Jaseem Rahman) கற்பிடிய பிரதேச சபைக்குற்பட்ட புழுதிவயல் கிராமத்திலிருக்கும் மத்திய மருந்தகத்தை சகல வசதிகளுடன் கூடிய வைத்திய சாலையாக தரமுயர்த மாகாண சபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதோடை, ரெட்பானா, பாலசோலை, கரம்பை, தேத்தாபளை , மற்றும் புளுதிவயல் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினமும் இந்த வைத்தியசாலையை பயன்படுத்தி வருகிமையால் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி மாகாண சுகாதார அமைச்சரின் அனுமதியுடன் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிமின் நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக வைத்திய விடுதி மற்றும் நோயாளர் விடுதி பிரசவ வாட் போன்றவற்றை அமைக்க நிதி வழங்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் பொறியியலாளர் குழு 15.09.2016 வைத்தியசாலைக்கு விஜயம் செய்து திட்டமிடல் நடவக்கைகளை மேற்கொண்டனர்.

