Saturday, September 24, 2016

மூதூா் கல்வி வலயத்தில் ”ஆரம்பக் கல்வியை வளர்த்தெடுப்போம்” பொருளியல் கண்காட்சி



மூதூர் வலயக் கல்வி அலுவலக அணுசரனையுடன் (2016.09.23,24,25) தி/மூ/அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் 'தி/ம/சிங்கள ம.வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை வளர்த்தெடுப்போம்' என்ற தொனிப் பொருளில் கண்காட்சி நடைபெருவது வரவேற்கத் தக்க விடயமாகும்.

எமது வலயக் கல்விப் பணிப்பாளர் Mkm. மன்சூர் Sir அவர்கள் பதவியேற்று இற்று வரை ஆரம்பக் கல்வியின் வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்ற ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தி வருவது யாவரும் அறிந்த விடயம். அத்திட்டத்தின் ஒரு மைல் கல்லாகவே இக்கல்வி கண்காட்சியாகும்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்கள் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் Quality inputs (கற்றல் சாதனங்கள்) பயன்படுத்தி கையாள்வதாகும்.ஏனேனில் இச்செயற்பாட்டின் ஊடாகவே மாணவர்கள் பாடம் தொடர்பான எண்ணக்ககருக்களை பெற்றுக் கொள்கின்றனர்.

இன்றைய முன்ணனி நாடுகளின் வளர்ச்சிக்கு மாணவர்களில் விழுமியக் கல்வி இருந்ததே முதன்மை காரணமாக உள்ள அதேவேளை எமது நாடும் அக்கல்வியை எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது.

பாடசாலையில் கற்று வெளியாகும் ஒவ்வொரு மாணவனும் தாம் கற்ற கல்வியை  சமூகத்தில் பிரயோகிப்பதும் எல்லோரும் விரும்பும் சிறந்த பிரஜையாக உருவாகுவதற்கும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரின் இம்முன்னெடுப்புக்கு அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுத்து அதை நடைமுறைப் படுத்தும் திட்டங்களையும் வகுத்து இன்சா அல்லாஹ் எதிர் காலத்தில் மூதூரில் பல துறைகளிலும் எமது சிறார்களை உருவாக்குவதற்கு இது வழசமைக்கும் 

இவ்வூர் மக்கள் மாணவர்கள் பெற்றார்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றுவதனை காணககூடியதாகவுள்ளதுடன் இன்றைய தினம் இவ்விடத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்திருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது


றபீக் சர்றாஜ்
மூதூர்





Disqus Comments