Saturday, September 24, 2016

500 மில்லியன் யாகூ கணக்காளர்களின் தகவல்கள் திருட்டு -பயனாளா்கள் அதிா்ச்சியில்

யாகூ (Yahoo) இணையத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் 500 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாகூ இணையத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் 500 மில்லியன் பேரின் தகவல்கள் 2014 ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய புலானாய்வுத்துறை விசாரனை செய்து வருவதாகவும் யாகூ தெரிவித்துள்ளது.
கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக யாகூ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
2014 முதல் கடவுச்சொற்களை மாற்றாத நபர்கள் உடனடியாக அவற்றை மாற்றும்படியும் யாகூ கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலையில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யாகூ நிறுவனத்தை அமெரிக்காவின் தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான வெரிசான் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments