அரச சேவை ஆணைக்குழவின் உத்திரவின் பிரகாரம் இலங்கை கல்வி நிா்வாக சேவையின் iiiஆம் வகுப்புக்கு சோ்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை-2015/2016 கடந்த மே மாதம் 29ம் திகதி நடைபெற்றது. மேற்படி பரீட்சை மூலம் கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை கல்வி நிா்வாக சேவையின் iiiஆம் வகுப்பின் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்கள், மற்றும் பொது ஊழியா் எண்ணிக்கை மற்றும் விசேட ஊழியா் எண்ணிக்கையின் தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பப் பாடங்களில் காணப்படும் 219 வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தகைமை கொண்டோரினைத் தோ்ந்து எடுப்பதே நோக்கமாகும்.
மேற்படி பரீட்சைகளில் சித்தி பெற்ற 265 பேரின் பெயா்கள் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இவா்களில்
- உயிரியல் தொழில் நுட்பம் - 6 போ்
- பொறியியல் தொழில்நுட்பம் - 8 போ்
- தகவல் தொழில் நுட்பம் - 14 போ்
உள்ளடங்குகின்றனா்.
மொழி அடிப்படையில்
- சிங்களம் - 228
- தமிழ் - 34
- ஆங்கிலம் 3

















