(முஹ்சி
ஆசிரியா்) 2015ம் ஆண்டு
நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவா்களுக்கு
பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு
இன்று நடைபெற்றது.
மேற்படி
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா், MHM. நவவி அவா்களும், மாகாண சபை உறுப்பினா் NTM.
தஹிர் மற்றும் நியாஸ் ஆகியோரும், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளா் நஸ்மி அவா்களும்,
முன்னால் நகர சபை ஊறுப்பினா் AO. அலிகான் அவா்களும், அதிபா், ஆசிரியா், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினா்கள்
மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனா்.
மேற்படி
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் MHM. நவவி அவா்களது நிதியியலிருந்து புத்தளம் சாஹிரா
கல்லூரிக்கு 253 ஆசனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த
2015ம் ஆண்டு நடைபெற்ற
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவா்கள்,
விளையாட்டுக்களில் தேசிய அளவில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்கள் உட்பட இன்னும் பலவிதமான
திறமைகளை வெளிப்படுத்தின மாணவா்களுக்கு பரிசில், பணப் பரிசில்கள், மற்றும் பதக்கங்கள்
வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.