Wednesday, October 19, 2016

அகில இலங்கை பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற புத்தளம் ரப்அத்ஆராக்கு ஜனாதிபதியால் விருது.

நீல பசுமை யுகத்தை மாணவர்கள் மத்தியில் பிரபல்ய படுத்தும் நோக்கில் அரசினால் நடாத்தப்பட்ட ஆங்கில மொழி மூலமான பேச்சு போட்டியில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ராசிக் பரீத் ரப்அத்ஆரா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று புத்தளம் நகருக்கும் பாத்திமா கல்லூரிக்கும் பெருமையை பெற்றுத்தந்துள்ளார்.

இதற்கான பரிசளிப்பு நிகழ்வுகள்  நேற்று (18-10-2016) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நிகழ்வுகளுடன் இடம்பெற்றது. அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் சுற்றாடலோடு  சம்பந்தப்பட்ட  பல வெளிநாட்டு பிமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த தேசிய மட்ட போட்டியானது அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் ஆங்கில மொழி மூலம் 10 மாணவர்கள் போட்டியிட்டதில் ராசிக் பரீத் ரப்அத் ஆரா முதலிடம் பெற்றுள்ளார்.

நீல பசுமை யுகம் பற்றி  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 10 மற்றும் 11ம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் கல்வி வலய  மட்டத்திலிருந்து சகல மொழி மூலம் இந்த போட்டிதனை அரசு நடைமுறைப்படுத்தி இருந்தது.

இதில் ஆங்கில மொழி மூலம் கலந்து கொண்ட ராசிக் பரீத் ரப்அத் ஆரா  புத்தளம் வலய மட்டத்தில் முதலிடத்தையும், மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகி அங்கும்  முதலிடம் பெற்றுள்ளார்.
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் ராசிக் பரீத் ரப்அத் ஆரா ஒரு சிறந்த ஆங்கில மொழி அறிவிப்பாளர் ஆவார். இவர் புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் வதியும் ராசிக் பரீத் பாயிஸா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.


Disqus Comments