Tuesday, November 22, 2016

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கானது - இரத்து செய்யப்பட்ட போட்டிப்பரீட்சை 27ம் திகதி!

கிழக்கு பட்டதாரிகளுக்கு நடத்தப்பட்டு இரத்து செய்யபபட்ட போட்டிப்பரீட்சைக்கான பதில் பரீட்சையை இம்மாதம் 27 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப்புக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் அறிவித்தலுக்கு முரணாக பொது வினாத்தாள் அமைந்திருந்தாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து ஏற்கனவே நடப்பட்ட போட்டிப்பரீட்ரை இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments