அண்மையில்
கண்டி - அன்கும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான
காரணம் தற்போது வெளியாகியுள்ளது.கடந்த வாரம் கண்டி அன்கும்புர பகுதியில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான கானொளி சமூக
வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
எனினும்
இந்த சம்வத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது
செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் உண்மை தகவல்
வெளியாகி உள்ளது.
காதல் விவகாரத்தின் அடிப்படையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த
நபரின் காதலி என கூறப்படும் பெண்ணுக்கும், தற்போது மத்திய கிழக்கு
நாட்டில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பு குறித்த காலத்திற்கு பிறகு முறிவடைந்த நிலையில் உயிரிழந்த இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் ஏற்ப்பட்டுள்ளது.
வெளிநாட்டில்
பணிபுரியும் முன்னாள் காதலன் அறிந்து கொண்டுள்ள நிலையில், ஆட்கள் வைத்து
குறித்த நபரின் நடவடிக்கைகள் மற்றும் அவரின் செயற்பாடுகள் கண்காணிக்க
ஆட்களை நியமித்துள்ளார்.
இதற்காக சுமார் ஒன்பது இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.
இந்த
கொலை ஒரு வருடத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணையின் மூலம்
தெரிய வந்ததாக அன்கும்புர பொலிஸ் தலைமை கண்காணிப்பாளர் பாலித ஜயரத்ன
தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இந்த சம்பவத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை சம்பவத்திற்காக
பயன்படுத்திய குறித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தலைமையக
வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.