அண்மைக்காலமாக அதிமுக்கியம் வாய்ந்த, புலமைகளும் திறமைகளும் நிரப்பமாக வியாபித்துக்காணப்பட்ட ஆலிம்கள் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு எம்மை விட்டும் விடைபெற்றுள்ளனர், மற்றும் சிலர் நோயின் காரணமாக கட்டிலில் தேக்க நிலையில் ஆரோக்கியத்தை எதிர்பார்த்தவர்களாக நாட்களை கழிக்கின்றனர். (அல்லாஹ் வபாத்தானவர்களை மன்னிப்பதோடு நோயுற்றவர்களுக்கு சிறந்த தேகாரோக்கியத்தையும் உள தைரியத்தையும் வழங்கியருள்வானாக)
இந்நிகழ்வுகளைக் கவனிக்கையில் ஒன்று மாத்திரம் நன்றாக புலப்படுகின்றது, அதுதான் நபியவர்கள் கூறியது போன்று ஆலிம்கள் மரணிப்பதன் மூலம் அறிவு எம்மை விட்டும் உயர்த்தப்படுவதாகும்.
ஆக அறிஞர், ஆலிம் பெருந்தகைகள் எம்மத்தியில் வாழும் பொழுதே அவர்களிடம் சென்று துறைசார் கல்விகளைக் கற்று நாமும் பயன்பெற்று ஏனையோருக்கும் பயனடைவதற்கான வழிகளை வகுத்துக்கொடுப்போம்.
ஆலிம்கள் மரணித்ததன் பின் கைசேதப்படுவதை விடுத்து அவர்கள் உயிரோடு இருக்கும் வேளையில் அவர்களை அணுகி அவர்களிடம் இருக்கும் அறிவுக் கடலில் நன்றாக அள்ளி காற்றுள்ள போது தூற்றிக்கொள்ள எத்தனிப்பது தான் சிறந்த அறிவாளிகளின் அடையாளமாகும்.
எனவே எம்மத்தியில் இலைமறை காயாக வாழும் அறிஞர்களை இனம் கண்டு உரிய மரியாதைகளைக் கொடுத்து அவர்கள் மூலம் மக்கள் பயனடைய பொதுநல சிந்தையுடன் முழு முன்னெடுப்புகளை எடுப்பதற்கு சமூகமட்டத்தில் பொறுப்புள்ளவர்கள் முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாகும்,இவற்றை கருத்திற்கொண்டு ஏனையோரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிறந்த கல்விமான்களின் மூலம் கல்வியறிவு பெற்று அனைத்திலும் உச்சத்தை தொட்ட சமுதாயமாக திகழ முயற்சிப்போம்.
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனயா புரம்- பாலாவி