Thursday, November 24, 2016

கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்தோருக்கு நேர்முகத்தேர்வு நவம்பா் இறுதியில்!

கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளடன் எதிர்வரும்  ஜனவரி மாதம் மாணவர்கள் கல்லுரிகளில் உள்வாங்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.
50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிருந்து நான்காயிரத்து 65 பேர் கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அதிக எண்ணிக்கையானவர்கள் ஆரம்ப கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
Disqus Comments