Monday, November 28, 2016

புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலய மைதானத்துக்கு காணி கிடைத்தது. நியாஸ் MPC நடவடிக்கை

புத்தளம் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நியாஸ் MPC (Member of Provincial Council) முயற்சியால் விளையாட்டு மைதானம் அமைக்க பிரதேச செயளாளரினால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 80 வருடம் பழமையான இப்பாசாலையில் விளையாட்டு மைதானம் இல்லாமல் பாடசாலை மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனா். விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊர் மக்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய நியாஸ் Mpc யின் முயற்சியினாலும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அனுமதியினை பிரதேச செயளாளர் வழங்கினார்.

பாடசலைக்கு விஜயம் செய்து விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பிரதேச செயளாளரின் அனுமதி கடிதத்தினை நியாஸ் Mpc வழங்கி வைத்தார். குறித்த இடத்தை பாடசாலைக்கு பொற்றுக்கொள்வதற்காக முயற்சிகளை செய்த அனைத்து தரப்பினருக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
(ஜெஸீம் ரஹ்மான்)
Disqus Comments