அரசாங்கம் கள்ளத்தனமாக முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து ஜி எஸ் பி சலுகைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் நடாத்திய மிகப்பெரிய அமைதியான ஆர்ப்பாட்டத்தை முஸ்லிம் உலமா கட்சி வரவேற்று பாராட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த ஆட்சியிலும் இனவாதத்தை கக்கும் அரசின் செல்லப்பிள்ளையான பொதுபல சேனாவின் ஞான சாரர் தவ்ஹீத் ஜமாஅத் வீதிக்கு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஜனநாயகத்தக்கு விரோதமாக சூளுரைத்த போதும் அதனை கண்டு அஞ்சாது ஆர்ப்பாட்டத்தை செய்து காட்டியமை மிகச்சிறந்த செயலாகும்.
அதே வேளை முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கிழக்கு மாகாண முஸ்லிம் பகுதிகளில் இத்தகைய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் எதையும் நாம் காண முடியாமல் இருப்பதன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம்களும்ää அவர்களின் அமைப்புக்களும் இன’னமும் விழிக்கவில்லையா என்றும் அவர்களின் சமய சமூக பற்று குறைந்து வருகின்றனவா என்றும் கேட்க வேண்டியுள்ளது. ஞான சார வாழும் கொழும்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமென்றால் ஞான சாரர் எட்டிப்பார்க்க முடியாத கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கு அஞ்சி நடுங்குகிறார்கள் என்பது புரியவில்லை.
அதே போல் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கென அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் உப குழுவை ரத்துச்செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை தொடர்வோம் என ஆசாத் சாலி தெரிவித்துள்ளமையையும் உலமா கட்சி வரவேற்பதுன் இது விடயத்தை முதலில் சமூக ஊடகங்களுக்கு கொண்டு வந்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமா கட்சி பெரிதும் மகிழ்வடைவதுடன் இது விடயத்தை அரசாங்கம் வாபஸ் வாங்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.
