கிழக்கு மாகாணத்தில் 299 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை கட்டட தொகுதியில் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான 1,134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகக் கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 299 பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
