(-காதர் முனவ்வர்-)மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி தமது மறியாதையினை இழக்கும் இழி நிலைக்கு சிங்கள ஊடகங்களின் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. பொடி போட்டு விடை தேடுவது எது நோக்கமல்ல .அதே போல் யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடுகளும் எமக்கில்லை. இவ்வுலகில் நாம் பொய்யுரைத்த போதும் மறுமையில் அதனது வேதனை ஆஹோரம் என்பதை நன்கு உண்ர்ந்து கொண்டு சில உண்மைகளை சமூகத்தின் நன்மை கருதியும் நடு நிலையில் இருந்து சிந்திக்கும் மனி நேசம் கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதனை சமூகத்தின் முன் சமர்ப்பிக்கின்றேன்.
யார் எத்தனை உண்மைகளை எழுதினாலும், அதனை பொய்யென்று சொல்லும் நாவுகள் அதனை தொடர்ந்து செய்து கொண்டே போகும் என்பதனையும் நாம் அறிவோம். இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் சில சிங்கள தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைகள் என்பன வில்பத்து தொடர்பில் முடிச்சு போட ஆரம்பித்துவிட்டன. இதனது பின்னணியில் இனவாதிகள் குடும்பம் நடத்திவருவது தெளிவாக புலனாகின்றது.
கடந்த இரண்டு மூன்று தினங்களாக சீஜஏ உளவு படை வில்பத்து தொடர்பில் வெளியிட்டு பிரச்சாரங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவது காலத்தின் தேவையாகும். மன்னார் மாவட்டம் அமைந்திருப்பது வில்பத்து வனத்துக்குள் அல்ல என்பதற்கு போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னா ர் அரசாங்க அதிபர், முசலி பிரதேச செயலாளர், கிராம அதிகாரிகள், மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினர், சுற்றாடல் அதிகார சபை என்பன போதுமான அறிக்கைகளை வெளியிட்டுவந்த போதும், இனவாதமே வாழ்க்கை இதன் மூலம் ஊடக மாபியாவை வைத்து வயிறு வளர்க்கும் அரக்கர்கள் முசலி பிரதேசத்தில் மறிச்சுக்கட்டி முதல் சிலாவத்துறை வரையான பகுதியினை வில்பத்து என்று அடையாளப்படுத்தி பெறுபான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் மரியாதையினையும், முன்மாதிரியினை யும் இழிவுபடுத்த எடுத்துவரும் எல்லா முயற்சிகளையும் அல்லாஹ் தோல்வியடையச் செய்துள்ளான்.(அல்ஹம்துலில்லாஹ் ).
முசலி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சமாதானம் ஏற்பட்டதையடுத்து தமது சொந்த மண்ணுக்கு வருகைத்தந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு எதிராக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து வில்பத்து அபகரிக்கப்படுகின்றது என்று ஊலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களது நோக்கம் நிறைவேற தமிழ் பேசும் சகோதரர்கள் இந்த இனவாதிகளின் குடும்பத்தில் அங்கம் வகித்துள்ளதை நாம் அடையாளப்படுத்திவருகின்றோம். இப் படிப்பட்டவர்கள் மீண்டும் மக்களுக்குள் ஊடுறவி மீள்குடியேற்றத்தை தடுப்பதினை குறியாக கொண்டுள்ளனர்.
முசலி பிரதேச செயலகப் பிரிவில் சட்ட பூர்வமாக வழங்கப்பட்ட வீடுகளின் கூரைகளை சரிசெய்து கொண்டிருந்த போது அதனை பதிவு செய்து வில்பத்து அழிக்கப்படுகின்றது என்று இனவாத ஊடகம் தொடர்ச்சியாக கூவிவருகின்றது.
இது தொடர்பில் சில கேள்விகளை நீங்களும் கேட்டுப்பாருங்கள் –
1) அவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்றது என்றால் அதற்கான அதிகாரிகள் நடவடிக்கையெடுக்காமல் இருப்பார்களா ?
2) காடுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் பெரும்பான்மை சமூகத்தினை சார்ந்தவர்கள். இவ்வாறு இந்த இனவாத ஊடகங்கள் கூறுவது என்றால் அவர்களின் அறிக்கையினை தானே முற்படுத்தியிருக்க வேண்டும்.
3) அந்த அதிகாரிகளின் நேர்மையான அறிக்கை வில்பத்துக்கும் இந்த மன்னாருக்கும் தொடர்பு இல்லை என்பதை தெளிவான ஆதராங்களுடன் உரிய தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
4) இதனை கூட கேட்டு அறிய ஆர்வமில்லாத இந்த இனவாத ஊடகத்தினர் எவ்வித ஆதாரங்களும் இன்றி திரும்ப திரும்ப இதனையே கூறி வருகின்றதன் பின்னணி என்ன என்ற கேள்வியினை ஒரு முறை எழுப்பிபாருங்கள்.
இதற்கான பதிலை நீங்கள் பெறுவீர்கள், அப்படியானதொரு நிலையில் நீங்களும் உண்மைக்காக குறிப்பாக வடக்கில் அனைத்தையும் இழந்து கடந்த 26 வருடங்களாக அகதி என்ற நாமத்துடன், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வடபுல மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யும் கைமாறுதான் என்ன ? அவர்கள் விரும்பும் அவர்களது தாயகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் துணை போவது நேர்மையான சிந்தணையல்லவா ?
அநியாயத்தையும்,அபாண்டங்களையு ம்பரப்பிவரும் இனவாத ஊடகங்களின் போலி முகத்தை கிழிப்பதற்கு நாம் இவற்றுக்கு பதில் கொடுக்காமல் வீர வேசம் பேசுவது தான் காலத்தின் தேவையா?
இந்த சதிகளை தோற்கடித்து வடபுல எமது சமூகத்தின் எதிர்காலத்திற்கு எமது வாழ்வில் நாம் செய்த நற்காரியங்களில் இதுவும் இடம்பெறுவதை நாமும் உறுதிபடுத்த தயாராகுவது எமது கடமையல்லவா ?
