Friday, December 30, 2016

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நாவின் பிரேரணையும் - உதாசீனம் செய்யும் இஸ்ரேலும்!

இஸ்ரேலின் கோரப் பிடிக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனை மீட்டெடுப்பதற்காக பாலஸ்தீன மக்கள் 65 வருடங்களுக்கும் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அவர்களின் ஊரிழப்புகள்,சொத்து இழப்புகள், இடம்பெயர்வுகள் என ஏராளமான இழப்புகளைசந்தித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் இறுதி வெற்றியை அடைவதற்காக – பாலஸ்தீன் மண்ணை முற்றாக மீட்டெடுப்பதற்காக – மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக – உலக முஸ்லிம்களின் முதலாவது கிப்லவான அல்-அக்ஸா பள்ளிவாசலை மீளக் கைப்பற்றுவதற்காக அரசியல் ரீதியாகவும் ஆயுதரீதியாகவும் பாலஸ்தீன மக்கள்போராடி வருகின்றனர்.

பாலஸ்தீனின் இரு பிரதான அரசியல் கட்சிகளான பதாஹ்வும் ஹமாஸூம் இந்தப் போராட்டத்தை நெறிப்படுத்திவருகின்றன. பாலஸ்தீனின் தேசிய அரசை உருவாக்கி செயற்படும் இந்த இரு கட்சிகளுள் ஹமாஸ் ஆயுத மற்றும் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க பதாஹ் அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

பதாஹ் கட்சி சர்வதேச மததியஸ்துதான் இஸ்ரேழுதன் பேச்சுகளை நடத்தி அவற்றின் ஊடக இஸ்ரேலால் கைப்பற்றப்படட பாலஸ்தீன நிலங்களை மீட்டெடுக்க முயற்சிகளை எடுத்து வருகின்றது; பல சுற்றுப் பேச்சுகளை இஸ்ரேலுடன் நடத்தியும் உள்ளது.

2014 இல் பதாஹ்வும் ஹமாசும் இணைந்து தேசிய அரசை நிறுவுவதற்கு முன் பதாஹ் அமெரிக்காவின் மத்தியஸ்துடன் இஸ்ரேலுடன் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியது. கிழக்கு ஜெரூஸலத்தை தலைமையகமாகக் கொண்ட சுயாதீன பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும்; 1967 இற்கு முன்பிருந்த பாலஸ்தீனம் உருவாக்கப்படவேண்டும்; 1967 இற்கு பிறகு இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பாலஸ்தீன நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை முன் வைத்தே இஸ்ரேலுடன் பேச்சுகளை நடத்தியது. அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மருத்ததாலும் பேச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே பாலஸ்தீன் நிலங்கள் இஸ்ரேலால் அபகரிக்கப்பட்டுக் கொண்டு இருந்ததாலும் பதாஹ் பேச்சில் இருந்து வெளியேறி ஹமாஸுடன் இணைந்து தேசிய அரசை உருவாக்கியது.

அதன் பிறகே ஹமாஸ்-இஸ்ரேலுக்கு இடையிலான 51 நாள் யுத்தம் இடம்பெற்று முடிந்தது. அந்த யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் கூட பதாஹ் கட்சி பாலஸ்தீனை மீட்கும் காய் நகர்த்தல்களை செய்து கொண்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக பாலஸ்தீன் நிலத்தை விடுவிப்பதற்கு அரபு லீக்குடன் இணைந்து இஸ்ரேலுக்கு காலக்கெடுவொன்றை விதிக்கும் நடவடிக்கையில் பதாஹ் இறங்கியது. அதன்படி, 1967 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை இஸ்ரேல் கைப்பற்றியுள்ள பாலஸ்தீன நிலங்கள் அனைத்தையும் மூன்று வருடங்களுக்குள் மீள ஒப்படைக்க வேண்டும் என்றொரு பிரேரணையை பதாஹ் கட்சி முன்வைத்தது..

அதன் அடிப்படையில் இஸ்ரேல் தமது நிலங்களை தம்மிடம் ஒப்படைக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக பரந்துபட்ட அரசியல் யுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும் சர்வதேச நாடுகள் இஸ்ரேலை முற்றாகப் பகிஷ்கரிப்பதற்கானசெயற்பாடுகள் முடுக்கி விடப்படும் என்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.

இப்போது மீண்டும் ஒரு பிரேரணை ஐ,நாவின் பாதுகாப்பது சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் நிர்மாணித்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் என்பதே அந்தப் பிரேரணையாகும்.

இந்தப் பிரேரணையை ஐ.நா.ஏற்று பாலஸ்தீன நிலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலுக்கு உததரவிட்டாலும்கூட இஸ்ரேல் அந்த உத்தரவை ஏற்பது நடவாத காரியம் ஐ.நா.வின் உத்தரவுகளை இஸ்ரேல் உதாசீனம் செய்த வரலாறுகள்தான் அதிகம். ஐ.நாவை வழி நடத்துவது அமெரிக்காவாக இருப்பதாலும் இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருப்பதாலும் இஸ்ரேல் இந்த பிரேரணைகளுக்கெல்லாம் அடி பணியாது.

இஸ்ரேல் கைப்பற்றிய அதிகமான நிலங்களுள் அதிகமான நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இஸ்ரேலிய தொழில்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன; யூதர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்புகள் இந்த நிலங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன. மறுபுறம் இந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இந்த நிலங்களிலேயே இஸ்ரேலின் கை கூலிகளாக-அடிமைகளாக பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு பொருளாதாரக் கட்டமைப்பை-யூதகுடியிருப்புகளை சிதைத்து விட்டு அந்த நிலங்களை பாலஸ்தீனிடம் இஸ்ரேல் மீள ஒப்படைக்கும் என்பது கனவிலும் நடக்காத ஒன்று. அவற்றைக் கைப்பற்ற பாலஸ்தீன மக்கள் இன்னும் போராட வேண்டும்.

பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது. பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம்கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தது. அது போதாது என்று அன்றிலிருந்து இன்று வரை யூதர்கள் பாலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றனர்.

யூதர்களால் பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சியோனிச தலைவர் டேவிட்பேங்கியூரியனால் இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. மறு நாளே யூதர்கள் சுமார் 500 பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து 7 லட்சம் முஸ்லிம்களை வெளியேற்றி அந்த நிலங்களைக் கைப்பற்றினர். அதே காலபகுதியில் பல நாடுகளில் இருந்து 7 லட்சம் யூதர்கள் வரவழைக்கப்பட்டு அந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனால், இஸ்ரேலுக்கும் அதனைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்த யுத்தத்தின் பின் பாலஸ்தீனின் காஸா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும்-அல்-அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட மேற்குக் கரைஜோர்தானின் நிர்வாகத்தின் கீழும் வந்தன.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது யுத்தத்தின் முடிவில் காஸா, அல்-அக்ஸா உள்ளிட்ட மேற்குக் கரை, எகிப்துக்குச் சொந்தமான சினாய் பாலைவனம், ஜோர்தானுக்குசொந்தமான ஜோர்தான் பள்ளத்தாக்கு, சிரியாவுக்குச் சொந்தமான கொலன் ஹெய்ஸ், லெபனானுக்கு சொந்தமானஷெபா விவசாய நிலங்கள் போன்றவை இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டன.

1978 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் பாலைவனத்தை எகிப்திடம் மீள ஒப்படைத்தது. 2005 ஆம் ஆண்டுகாஸாவை விட்டும் வெளியேறியது. காஸாவில் நிறுவப்பட்டிருந்த யூத குடியேற்றங்களை மேற்குக் கரைக்குமாற்றியது.

மேற்குக் கரை, ஜோர்தான் பள்ளத்தாக்கு, சிரியாவின் கொலன் ஹெய்ட்ஸ், லெபனானின் செபா விவசாய நிலங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. கைப்பற்றப்படட அந்த நிலங்களை மீட்டெடுக்க அந்தந்த நாடுகள் ஏதோவொரு வகையில் முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற போதிலும் மேற்குக் கரையை மீட்கும் போராட்டமே முக்கியமானதாகும்.

மேற்குக் கரையை-அல்-அக்ஸா பள்ளிவாசலை மீட்கும் போராட்டம் விரைவில் வெற்றி பெற வேண்டும் என்பதே உலகமுஸ்லிம்கள் அனைவரினதும் விருப்மாகும். இதை மீளக் கைப்பற்றும் பாலஸ்தீன போராட்டத்துக்கு கை கொடுக்கவேண்டியது உலக முஸ்லிம் நாடுகளின் கடமையாகும். இந்தக் கடமை சரியாக நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீன் இஸ்ரேலிடமிருந்து மிக விரைவில் முழுமையாக மீட்கப்படும் என்பது நிச்சயம்.

இந்த வருடம் ஜூன் மாதம் பதாஹ்வும் ஹமாசும் இணைந்து தேசிய அரசை நிறுவுவதற்கு முன் பதாஹ் அமெரிக்காவின் மத்தியஸ்துடன் இஸ்ரேலுடன் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியது. கிழக்கு ஜெரூஸலத்தை தலைமையகமாகக் கொண்ட சுயாதீன பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும்; 1967 இற்கு முன்பிருந்த பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும்; 1967 இற்கு பிறகு இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பாலஸ்தீன நிலங்கள் அனைத்தும்விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை முன் வைத்தே இஸ்ரேலுடன் பேச்சுகளை நடத்தியது. அந்தநிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுத்ததாலும் பேச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே பாலஸ்தீன் நிலங்கள் இஸ்ரேலால் அபகரிக்கப்பட்டுக் கொண்டு இருந்ததாலும் பதாஹ் பேச்சில் இருந்து வெளியேறி ஹமாஸுடன் இணைந்து  தேசிய அரசை உருவாக்கியது.

இஸ்ரேல் கைப்பற்றிய அதிகமான நிலங்களுள் அதிகமான நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இஸ்ரேலிய தொழில்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன; யூதர்கள் விவசாய நடவடிக்கைகளில்டு ஈட்டுள்ளனர். இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்புகள் இந்த நிலங்களில் இருந்துதான்ப  பெறப்படுகின்றன. மறுபுறம் இந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இந்த நிலங்களிலேயே இஸ்ரேலின் கை கூலிகளாக-அடிமைகளாக பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு பொருளாதாரக் கட்டமைப்பை-யூதகுடியிருப்புகளை சிதைத்து விட்டு அந்த நிலங்களை பாலஸ்தீணிடம் இஸ்ரேல் மீள ஒப்படைக்கும் என்பது கனவிலும்நடக்காத ஒன்று. அவற்றைக் கைப்பற்ற பாலஸ்தீன மக்கள் இன்னும் போராட வேண்டும்.

இவ்வாறு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்தவண்ணமேதான் உள்ளது. அவற்றுக்கு எதிராகஐ.நா சபையும் பிரேரணைகளை நிறைவேற்றிக்கொண்டு தான் செழிக்கிறது. எந்தவொரு பிரேரணையும் வெற்றியளித்தது இல்லை. இந்த நிலையில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணையும் வீண் தான் என்பதில்  சந்தேகமில்லை.

[எம்.ஐ.முபாறக்]
Disqus Comments