Monday, December 26, 2016

கிழக்கில் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலை நினைவு நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)

(ரமணன் - வாழைச்சேனை)  வாழைச்சேனை, கல்குடா, கல்மடு, வலைவாடி கடலோரக் கிராமத்தில் Future Mind(எதிர்கால சிந்தனை) அமைப்பினால்சுனாமி நினைவேந்தல் நிகழ்வு சுனாமி பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையிலும், இவ்வனர்த்தத்தின் வடுக்களைச் சுமந்த மக்கள் இன்னமும் அவ்வலியினை சுமந்துகொண்டே வாழ்வைக்கழிக்கின்றனர். இந்நிலையில் கல்குடா, கல்மடு, வலைவாடி கடலோரக் கிராமத்தில் இன்று(26.12.2016) Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பினால் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு ஒன்று காலை 09.25 மணியளவில்நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மதகுருக்களும், கோறளைப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்க.ஜெகதீஸ்வரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீதரன், Future Mind(எதிர்கால சிந்தனை) அமைப்பின்அங்கத்தவர்களும், கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும், மீனவர் சங்கத்தினரும், உறவுகளை இழந்த குடுப்பத்தினரும்மற்றும் ஏனைய பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றதைத் தொடர்ந்து, 2004.12.26 அன்று சுனாமி பேரலையால் காவுகொள்ளப்பட்டகுடும்பதினாரால் நினைவுத்தூபி அருகே வைக்கப்பட்டுள்ள இறந்த ஆத்மாக்களின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றிமலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ குருமார்களினால் ஆத்ம சாந்தி வழிபாடுசெய்யப்பட்டு, எதிர்காலத்திலும் இந்த அனர்த்தம் ஏற்படாமலிருக்க பிரார்த்திக்கப்பட்டது. இறுதியாக சுனாமியால்காவுகொள்ளப்பட்டவர்களின் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு Future Mind அமைப்பினரினால் பாடசாலைஉபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.




Disqus Comments