(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாடு பூராகவும் டெங்கு நுளம்பின் பாதிப்பு அதிகளவாக காணப்படுகின்ற இந்த வேளையில் கல்முனை பிரதேசத்திலும் அதிகளவானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப் பட்டு அதர்க்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாளை ( 27 ) கல்முனைக்குடி பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஒன்று கல்முனை மாநகர சபை மற்றும் அனைத்து விளையாட்டு கழகங்களின் சார்பாக இடம்பெற உள்ளது.
இந்த டெங்கு நுளம்பு ஒழிக்கும் செயற்திட்டத்தில் பொது மக்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் உள்ள டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான
தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன. உதாரணமாக குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள் போன்ற மேலே குறிப்பிட்ட பொருட்களை சுத்தம் செய்து அந்த கழிவுப் பொருட்களை நாளை ( 27 ) ம் திகதி உங்கள் வீதிகளில் வரும் விசேட டெங்கு பரவும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் வாகணத்தில் போடுமாறு வேண்டிக்கொள்ளப் படுகிரீர்கள் .
குறிப்பு எக்காரணம் கொண்டும் ஏனைய குப்பைகளை விசேட வட்டியில் போட வேண்டாம் .
தகவல்
சுகாதார வைத்திய அதிகாரி
கல்முனை தெற்கு
