நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.