கல்பிட்டி பத்தலங்குண்டுவ தீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பத்தலங்குண்டுவ தீவு பகுதியில் உள்ள பெண் ஒருவர் பதிவு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளச் சென்ற போதே பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தின் போது அடாவடித்தனமாக நடந்து கொண்ட முறைப்பாடு செய்த பெண்ணின் மகனே, பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினரால் கல்பிட்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.