கட்டார் அரபு நாளிதலாள அர்ராயாவின் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்லாந்து நாட்டின் பேன்கொக் நகரத்தில் இருந்து கட்டார் - டோஹாவுக்கு பறந்த விமானத்தில் பணி புரிந்த பெண்ணுக்கே குறித்த நபா் போதையான நிலையில் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி விமானப்பணிப்பெண்களால் வழங்கப்பட்ட பயண அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்ததோடு, சக பிரயாணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கும் இடையூராக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிரங்கிய பின்னர், அவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர், நீதி மன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவா் மீதான குற்றங்கள் நரூபிக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடம் சிறைத் தண்டணையும், ஒரு இலட்சம் கட்டார் றியால்கள் அபராதத்தையும் விதித்துள்ளது கட்டார் குற்றவியல் நீதிமன்றம். அவா் எந்த நாட்டவர் என்பது தொடா்பான உறுதியான எந்தத் தகவலும் இதுவரை வெளியாக வில்லை.