ஓமன் கத்தார் பொதுமன்னிப்பு வழங்கியதை அடுத்து தற்போது சவுதியும் பொதுமன்னிப்பு அறிவித்துள்ளது. இது மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இதையடுத்து சவுதியில் நாளை முதல் இந்திய இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் விதத்தில் பொது_மன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது என்று சவுதியும் அறிவித்துள்ளது.
இதன்படி எந்த தன்னையும் பிழையும் செலுத்தாமல் தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியும் (கிரிமினல் குற்றவாளிகள் தவிர). இந்த நடைமுறை நாளை ஜனவரி 15/01/2017 முதல் ஏப்ரல்12/04/2017 வரையில் நடைமுறையில் இருக்கும். இதற்கு பிறகும் தாயகம் செல்லாத நபர்களுக்கு கடுமையாக தண்டனைகள் விதிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர ஹஜ்ஜுக்கு வருகை தந்து தாயகம் திரும்பாமல் சவுதியில் உள்ள வெளிநாட்டினரும் இதை பண்படுத்தி தாயகம் செல்ல முடியும். இதில் முக்கியமான ஒன்று சாதாரண சட்டத்திற்கு புறம்பாக சவுதியில் தங்கி பிடிபடும் நபர்களை தாயகம் அனுப்பினால் திருப்பி சவுதி வரமுடியாத படி தடை விதிக்கப்படும். ஆனால் இந்த பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் செல்லும் நபர்கள் திரும்பவும் சவுதி வர அனுமதிக்கபடுவார்கள்.
மேலும் இப்படி சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் தங்களிடம் உள்ள அடையாள ஆவணங்கள் மற்றும் பயணத்திற்கு தேவையான ஆவணங்களுடன் தங்களுடைய பகுதியில் தொழிலாளர் அலுவலகத்திற்கு(Labor office) செல்ல வேண்டும்.
அங்கிருந்து கிடைக்கும் (பயணத்திற்கான) ஆவணங்களுடன் ஜவசாதை அணுக வேண்டும் அங்கிருந்து Final_Exit பேப்பர் வழங்கபடும். இதன்மூலம் தங்களுடைய தாய் நாடுகளுக்கு செல்ல முடியும்.இதற்காக எளிதாக ஒன்பது வழிமுறைகளை சவுதி வகுத்துள்ளது.
ஆனால் சவுதி சட்டத்தை மீறிய( எ.கா ஓட்டுநர்கள் சாலை வீதி மீறியதற்காக விதிக்கப்பட்ட பிழைகள்) இது போன்ற பிழைகளை கட்டினால் மட்டுமே தாயகம் செல்ல முடியும். இதை முதலில் முதலில் தமிழ் மக்களுக்கு உதவும் விதத்தில் பதிவு செய்வதில் Kuwait-தமிழ் பசங்க குழுவினர் மகிழ்ச்சி அளிக்கிறது.
Reporting by:Kuwait-தமிழ் பசங்க