Sunday, January 15, 2017

திருகோணமலை - கந்தளாயில் மழை வேண்டி தொழுகை இடம்பெற்றது (படங்கள்)

திருகோணமலை கந்தளாயில் மழை வேண்டி விசேட தூஆ பிரார்த்தனைகள் பேராறு விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
இதன்போது தொழுகையும்,தூஆ பிராத்தனைகளும் இடம் பெற்றது.
கந்தளாயில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட திடல் மற்றும் வயல் நெற்செய்கையானது மழை இன்மையால் பாதிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், விவசாயிகளின் நன்மை கருதி இப்பிரார்த்தனை கந்தளாய் நடஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

 இதன் போது விசேட தொழுகையினை ஹபிபுள்ளாஹ்(ஹித்திரி) மௌலவியினால் நடாத்தப்பட்டது



Disqus Comments