(பிராந்திய நிரூபர்) ஶ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் புத்தளம் நகரில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மாகாண சபை உறுப்பினருடன் 4ம் வட்டார இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் முகம்மது அஸ்கீன், அமைப்பாளர் பரீட், நூர்பள்ளி மஹல்லாஹ் அமைப்பாளர் முகம்மது றிபாய், சாஹிராவின் பிரதி அதிபர் நிஜாம், மற்றும் நடுவர்கள், உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் என்போரும் கலந்து சிறப்பித்தனர்.