Saturday, February 18, 2017

கட்டாரில் 1 இலட்சத்து 45 ஆயிரம் இலங்கையர்கள்! 2017ம் ஆண்டு சனத்தொகை புள்ளிவிபரம்!

ஒரு நாட்டில் தாயகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிகமாக வெளிநாட்டவர்கள் வாழ்க்கின்றார்கள் என்றால் அது 2022ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கின்னத்தை நடாத்த இருக்கும் கட்டாராகத்தான் இருக்க முடியும்.

கட்டார் நாட்டின் சனத்தை தொகை தொடர்பாக பிரபல இணையம் ஒன்று வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் இங்கு உங்கள் பார்வைக்காகத் தருகின்றோம். 
கட்டாரின் சனத்தொகையில் முதல் இடத்தில அதாவது,   25வீதம் இந்தியர்களாகும்.  6 இலட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேட்பட்ட இந்தியர்கள் கட்டடாரில் பணி புரிகின்றனர். 

இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் நேபால் நாட்டைச் சோ்ந்தவர்களாககும். அவர்கள் 3 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

கட்டாரை சொந்த நாடாகக் கொண்டவர்கள் 3 இடத்தில் தான் இருக்கின்றார்கள். அதாவது கட்டாரில் உள்ள கட்டாரிகளின் சனத்தொகை 3 இலட்சத்தி 13 ஆயிரங்கள் மட்டுமேயாகும். 

4வது இடத்தில் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களும், 5 இடத்தில்  பிலிப்பைன்ஸ் வாசிகளும், 6 இடத்தில் எதிப்தியர்களும், 7 வது இடத்தில் 5வீதமாக 1 இலட்சத்து 45 ஆயிரம் இலங்கையர்களும் கட்டாரில் வசிப்பதாக மேற்படி இணையதளம் வெளியிட்டுள்ளது.

மேலும் நாடுகள் புள்ளி விபரங்கள் தொடா்பான விடயங்களுக்கு  இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்


Disqus Comments