உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது
இதன்பிரகாரம், உள்நாட்டு நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலையாக 80 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பச்சரிசி ஒரு கிலோகிராமின் விலை 78 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி 90 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படல் வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டது.
வறட்சி மற்றும் ஏனைய காரணங்களால் நிலவிய அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், சந்தையில் அரிசிக்கான விலை தொடர்ந்தும் உயர்வடைந்ததை அடுத்து கடந்த 8 ஆம் திகதி அரிசிக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி அறிமுகப்படுத்தியது.
