Wednesday, February 22, 2017

கள்ளக் காதல்-சக ஊழியரால் 16 துண்டாக வெட்டப்பட்ட விமானப்படை அதிகாரி!


கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை சக ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து உடலை 16 கூறுகளாக துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் விமான படை தளத்தில் விமானப்படை கார்போரேல் அதிகாரியாக விபன் சுக்லா(27) பணிபுரிந்து வந்தார். 

2014ம் ஆண்டு பஞ்சாப் பதிண்டா விமானப் படை தளத்தில் விபன் சுக்லா பணியில் சேர்ந்துள்ளார். 

அவர் தன் மனைவி இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். 

பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சார்ஜெண்ட் அதிகாரியான சுலேஷ் குமாரின் மனைவி அனுராதாவுக்கும் விபன் சுக்லாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்காதலி கர்ப்பம் 

இதில் அனுராதா கர்ப்பமானார். இதனால் கணவர் சுலேஷ் குமாரை டைவர்ஸ் செய்துவிட்டு விபன் சுக்லாவை திருமணம் செய்யவும் திட்டமிட்டார் அனுராதா. 

ஆனால் விபன் சுக்லா கருவை கலைக்குமாறு கூறி அனுராதாவை கைவிட்டுவிட்டார். 

குடும்பத்தில் குழப்பம் 

இந்த விவகாரத்தால் சுலேஷ் குமார் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. 

சுலேஷ் குமார், அனுராதா மற்றும் அனுராதாவின் சகோதரர் பூஷன் மூவரும் விபன் சுக்லாவை கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டினர். 

சுக்லாவை வரவழைத்து 

இந்த திட்டத்தின்படி கடந்த 8 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு சுக்லாவை உதவி செய்யுமாறு தமது வீட்டுக்கு அனுராதா அழைத்திருக்கிறார். 

அங்கு பதுங்கியிருந்த சுலேஷ் குமார், அனுராதாவின் சகோதர் பூஷன் ஆகியோர் விபன் சுக்லாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். 

பெட்டியில் அடைத்து வைப்பு 

சுக்லாவின் உடலை ஒரு பெட்டியில் வைத்து பூட்டியது சுலேஷ்குமார் குடும்பம். பின்னர் கடந்த பிப்ரவரி 19-ந் திகதியன்று சுக்லாவின் உடலை 16 கூறுகளாக வெட்டி 6 பாலித்தீன் பைகளில் போட்டு அடைத்துவிட்டு புதிய வீட்டுக்கு போய்விட்டனர் 

சுக்லாவின் மனைவி பொலிஸில் முறைப்பாடு 

இதனிடையே கணவரை காணவில்லை என்று கடந்த 9ம் திகதி விபன் சுக்லாவின் மனைவி கும்கும் பலுவானா காவல் நிலையத்தில முறைப்பாடு அளித்துள்ளார். 

இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் மோப்ப நாய் உதவியுடன் சுலேஷ் குமார் வசித்த வீட்டின் அலமாரி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து 16 பிளாஸ்டிக் பைகளில் இருந்து சுக்லாவின் உடல் மீட்கப்பட்டது. 

குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது 

இதையடுத்து சுலேஷ் குமார், அவரது மனைவி அனுராதா மற்றும் சகோதரர் பூஷன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரியை சக ஊழியரே வெட்டி கூறாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disqus Comments