Sunday, February 12, 2017

2017ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செயல்முறை பரீட்சை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளததாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் காலதாமதமாக கிடைக்கும் பட்சத்தில், அவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Disqus Comments