Sunday, February 12, 2017

இலட்சக்கணக்கான பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் சிக்கினார்


29 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் ஹொரன பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஹொரன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, மொரகஹஹேன - கொடிகன்கொட பகுதியில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், சந்தேகநபர் வசமிருந்து அச்சிடப்பட்ட போலி நாணயத்தாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்படி, 5000 ரூபா நாணத்தாள்கள் 106, 1000 ரூபா நாணயத்தாள்கள் 1830 மற்றும் 500 ரூபா நாணயத்தாள்கள் 1079 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன், குறித்த நாணயங்களை அச்சிட பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கனணி, ஸ்கேனர் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை, சந்தேகநபர் வெல்லம்பிடிய - பொகுனுவிட பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இவரை ஹொரன நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
Disqus Comments