பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இன்று (21) இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 5 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள சர்ச்சட்டா மாவட்டத்தின் டாங்கி நகரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த 5 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த வாரம் பிரேசன் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.